Monday, June 27, 2011

நீ இல்லாதபோது!...

நீ இல்லாதபோதுதான் புரிகிறது
உன் இருப்பின் அவசியம்!.. ரகசியம்!
இன்னும் என்னென்னவோ! ....
மறைக்க மனமில்லை மறைத்தால்
மனம் செய்யும் தற்கொலை!
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கோபம்! வெறுப்பு! அகராதித்தனம்!...
யாரிடம் உரிமை காட்டுவாய் எனையன்றி?!....
"பக்குவப்படுவாய்" என்றுதான்
பலவும் சொல்லித்தீர்த்தேன்
"பழகிப்போச்சு" என்கிறாய்!
"பாடாய்படுத்துகிறாய்" நீ
தினமும் சொல்லும் "அமுதமொழி"
என்ன செய்வேன்?! நான் இன்னும் பக்குவப்படவில்லை!..
"மறந்து தொலைக்கிறேன்" உன்னோடு
சண்டை போட்டும் சமாதானம் செய்துகொள்ள!......
இப்போதுதான் புரிகிறது நீ இல்லாத போது
நிகழும் நிகழ்வுகளும் அதன் நிறைவுகளும்!!....

Monday, March 21, 2011

காதல் + ஈகோ = பிரிவு............

 

உன் காதல் பெரியதா
என் காதல் பெரியதா
என்று போட்டி போட்டுக்கொண்டு

நமக்கு நாமே கொடுத்துக்கொண்ட

தண்டனை
நம்..............................பிரிவு

காதலின் வலி உணராதவள்.......

அன்பே கலங்காதே
உன் கண்ணீர் துளிகளால்
என்னை வதைக்காதே

உன் பெற்றோரின்

கவுரவத்திர்க்காக தானே
என்னை அன்று விட்டு சென்றாய்

இப்போது ஏன் திரும்பி

வந்தாய் உன் பெற்றோரின் கவுரவம்
இப்போது உன் கண்களுக்கு தெரிய வில்லையா

தயவு செய்து போய்விடு

அன்று நீ என்னை பிரிந்த போது
நான் தவித்த தவிப்பு உனக்கு தெரியாமலே
போனது

பிரிவின்

தவிப்பை உணர்ந்தவன் நான்

இன்று உன் பெற்றோரை பிரிந்து

அவர்களையும் என்னை போல் தவிக்க
வைக்காதே உன் பெற்றோரிடமே
சென்று விடு..................

நீ காதலின் வலி உணராதவள்..........

நான் என்ன செய்யட்டும் என் இதயத்தை.....

 

என் கனவுகள்
எல்லாம்
உன்னை பற்றிய
நினைவுகள் தான்...
என் நினைவுகள்
எல்லாம்
உன்னை பற்றிய
கனவுகள் தான்....

Wednesday, February 23, 2011

பூ வைத்து விடு

உந்தன் நிழல் படாமலே
உந்தன் அன்பால் என் தாயான
என் தாயானவனே ...என்னை
பொறுத்தவரை நீ அதிசய
பிறவியடா நிஜங்கள்
இல்லாமலே என்னை
ஆட்சி செய்ததால் ...... 

நாம வணங்கும் சாமிய
நாங்கள் பார்ப்பதில்லை
நீயும் எனக்கு கடவுள்
தானடா என்னை நெருங்காமலே
இருப்பதால் என்னவனே....

இறுதி வரை உனக்கு
பாத பூஜை செய்ய
காத்திருக்கும் உன்
பக்தை நானடா .நான்
இறந்து போனாலும் உன்
பிள்ளையாய் பிறந்தேனும்
உன்னை வணங்கிடுவேன் ... 

நான் இறந்தால் உன்
பிள்ளையை கொண்டாவது
என் சமாதிக்கு பூ வைத்து
விடு என்னவனே .....

மீண்டும் சந்திக்கையில்...!!!! (எழுத்து.காம்)

காதலில் பிரிவது

துயரமானது
பிரிந்த காதலியை
மீண்டும் சந்திக்க நேர்வது
கொடூரமானது
அவள் நம்மை யாரென தெரியாததுபோல்
முகத்தை திருப்பிக்கொண்டு கடந்துபோவதோ
மரணத்திற்கு ஒப்பானது....!!!!

எழுதியவர் :ராஜேஷ் நடராஜன்

இப்படிக்கு உன் காதல்மிராண்டி..

முத்தங் கக்கியே என்னைச் சாகடித்த

என் முத்தக் காட்டேரிக்கு..

.

கடித வழக்கப்படி நலம், நலமறிய ஆவல் என்று எழுதப்போவதில்லை.

நலக்குறைவு தான் காதலர்களின் உண்மையான நலம். 

அப்போது தான் புறங்கையில்

கழுத்தைத் தொட்டுப்பார்த்து

ஜுரம் குறைந்திருக்கிறதா? என்றும்

வயிற்றை அழுத்திப் பார்த்து

இப்போது வயிற்று வலி எப்படி இருக்கிறது? என்றும்

கேட்க முடியும்..     

இருப்பினும்,

உன் சௌக்கியத்தின் சதவிகிதத்தில்

என் நலத்தை நான் அறிவேன்.

அது போல

உன் நாடித்துடிப்பில்

என் சௌக்கியத்தை நீயே சரிபார்த்துக்கொள்..

போன முறை நீ எனக்கு எழுதிய கடிதத்தில்

உன்னைச் செல்லமாக

எப்படிக் கூப்பிடுவது என்று கேட்டு எழுதியிருந்தாய்.

.

சூரியன், சூரியகாந்தியை

எந்த உறவுமுறையில் கூப்பிடும்..

சொல்ல முடியுமா உன்னால்?. 



சேவல், விடியலை

எந்த அடைமொழியில் கூப்பிடும்..

பதில் தெரியுமா உனக்கு?.

என் கவிதைக்காரியே.....

அருவி அலறித்தான்

யாரையம் கூப்பிடும்..

மரம் தலையாட்டித்தான்

அழைக்கும் எவரையம்..

அழைப்பதும் கூப்பிடுவதும்

அதனதன் வெளிப்பாடு.

.

பெயர் சொல்லி அழைப்பது

மனித நடைமுறையின் எதார்த்தம் என்றால்

பெயர் விடுத்து

வாய்க்கு வந்த வார்த்தைகளால்

கூப்பிடுவது அதீத அன்பின் அத்துமீறல்களே!.



காற்று புகாத குழலில் இசையில்லை.

அத்து மீறாத அன்பில் காதலில்லை..

அளவுக்கு மீறிய அமுதத்தில் விஷம்.

அத்து மீறிய அன்பில் விஷமம்.

காதலில் விஷமம் அவசியம்.

அந்த விஷமங்களின் கால் பங்கை நிரப்புவது

இந்தச் செல்லப்பெயர்களே..

.

காதலில் மரியாதை என்பது

மடமை.

ஆகவே என்னை “மடையா“ என்று கூப்பிடு.

.

காதலில் கௌரவம் என்பது

கர்வம்.

ஆகவே என்னைப் “பொறுக்கி“ என்று கூப்பிடு.

.

சொந்தப் பெயரில் இல்லாத பெருமை

காதலி கூப்பிடும் பட்டப் பெயர்களில் இருக்கிறது.

.

பசுவின் தாய்மை

கன்றுக் குட்டியை நாவால் நக்கும்போது.

.

நாயின் நன்றி

வாலை ஆட்டிக் குழையும்போது.

.

காதலின் மகிமை

நீ என் தலையில் அடித்து

என்னை “முட்டாள்“ என்று திட்டும்போது.

.

உனக்குக் காதலன் என்ற முறையில்

உன் காதோடு ஒன்று சொல்கிறேன்.

உன் வாய்க்கு வந்த வார்த்தைகளாலெல்லாம் கூப்பிடு.

வாய்ப்புக் கிடைத்தால்

வரையறுக்கப்படாத வார்த்தைகளாலும்

என்னைக் கூப்பிடு.

.

எப்படி உன் உள்ளங்கை சிவக்கச் சிவக்க

மருதாணி உன்னைக் கூப்பிடுகிறதோ..

அப்படியே

உன் உதடுகள் சிவக்கச் சிவக்க

நீ என்னை

எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொண்டே இரு.

.

உனக்கொன்று தெரியுமா?

“டூ“ விட்டுக் கொள்ளாத நட்பும்

“டா“ போட்டுக் கூப்பிடாத காதலும் பாழ்

.

---

காதலிக்கிறேன்

என்ற இருமாப்புடன் நீ எனக்கு வைத்த

செல்லப் பெயர்களுடன்...

... உன் காதல்மிராண்டி.